கொழும்பில் கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டியில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கன்னன்குடா மகா வித்தியாலய மாணவி திருச்செல்வம் துஷாணி தேசிய மட்டத்தில் தனி நடிப்புப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்திய துஷாணி, தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று தனது பாடசாலைக்கும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவியின் இந்தச் சாதனைக்காக பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் தமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.








