Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (22) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

கல்முனை நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜனின் வீட்டுக்குச் சென்ற குழுவினர், குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கியதுடன், அனோஜனை தண்டனையிலிருந்து மீட்பதற்காக தாம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர், அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை மீட்டுத் தருமாறு கோரி நாளை (23) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக விசேட கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்திற்குச் சென்று அனோஜன் தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்காக எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்புக்கு வருகை தருமாறு அனோஜனின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அதனை குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதன்போது அனோஜனின் தாயார், தனது மகனை மீட்டுத் தருமாறு இலங்கை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்ததுடன், தனது மகன் செய்த தவறுக்காக மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரினார்.

இச்சந்திப்பில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரும் கலந்துகொண்டார். தமிழ் – சிங்கள மொழிபெயர்ப்பு உதவிகளும் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

September 22, 2026
பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது
செய்திகள்

பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிய சொகுசு கார் மீது துப்பாக்கிச் சூடு; மூவர் கைது

September 22, 2026
ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!
செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

September 22, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு