Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்றைய வானிலை எதிர்வுகூறல்; மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

இன்றைய வானிலை எதிர்வுகூறல்; மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று விருத்தியடைந்துள்ளது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில்மேலும் தீவிரமடைவதுடன் மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து செல்வத்துடன் எதிர்வரும் 11 ஆம் திகதியளவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் இலங்கைக்கு அப்பால் தமிழ் நாட்டுக் கரையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரிக லாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இதன் தாக்கத்தின் காரணமாக எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும். இதேவேளை இந்த நிலைமையுடன் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலையும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது.

ஆனபடியினால் வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுவதுடன் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
இலங்கை மக்களை அச்சுறுத்தும் தொழுநோய்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கை மக்களை அச்சுறுத்தும் தொழுநோய்; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.