கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபையில் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சுகாதாரம், துப்புரவு தினம் மற்றும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு ஒன்று பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச சபை தவிசாளர் க. தெய்வேந்திரனின் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், அவர்களின் சுகாதாரம் மற்றும் நோயாளர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

















இதன்போது கர்ப்பிணித் தாய்மார்களால் முன்வைக்கப்பட்ட குடிநீர் தொடர்பான கோரிக்கை தொடர்பில் கோறளைப்பற்று வடக்கு – வாகரை பிரதேச சபை செயலாளர் சி. புவனதாசன் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தீர்வுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டதுடன், சுகாதாரம் மற்றும் பொதுமக்கள் நலன் தொடர்பான கருத்துரைகளும் வழங்கப்பட்டன.








