Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும்; மனித உரிமை ஆணைக்குழுவில் அதாவுல்லா

திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும்; மனித உரிமை ஆணைக்குழுவில் அதாவுல்லா

2 years ago
in செய்திகள்

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், நேற்று (10) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும் கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக தன்னை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள் இம் மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டதுடன் வாக்குகள் எண்ணப்பட்டதிலும் பாரதூரமான மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கச்சேரியில் எமக்கு எதிரான சதி வலை பின்னல் தொடர்ந்து. ஆரம்பத்தில் காலையில் ஒரு விதமாகவும், பின்னர் வேறு ஒரு விதமாகவும் முடிவுகள் அறிவிக்கப்படலாயின. நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்று கொள்ளவில்லை ஏற்பதாக கையொப்பம் இட்டு கொடுக்கவில்லை.

வெளிப்படையாகவே ஆட்சேபித்தோம். ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. நாம் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று சட்டப்படி முறையாக கச்சேரியில் கோரினோம். ஆனால் வாக்குகளை மீண்டும் எண்ணப்படவே இல்லை. இதை ஆட்சேபித்து கொழும்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுத்துமூலம் பல தகவல்களையும் திரட்டியுள்ளோம்.

அவசியம் ஏற்படுகின்ற பட்சத்தில் உயர்நிலை நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வோம். நீதிக்கான எமது போராட்டம் தொடரும். நாம் கடந்த காலங்களில் அரசியலில் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம். என்றார். இந்த மனு கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸமும் கலந்து கொண்டதுடன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டி வெடிகுண்டு அகற்றும் பயிற்சியில் விமானப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பம்
செய்திகள்

கற்பிட்டி வெடிகுண்டு அகற்றும் பயிற்சியில் விமானப்படையினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பம்

June 19, 2026
சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!
செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இடம்பெறவிருந்த அமைதி பேச்சுவார்த்தை திடீரென இரத்து!

June 19, 2026
மஹர–கம்பஹா பகுதிகளில் அவசர நீர்விநியோகத் தடை!
செய்திகள்

மஹர–கம்பஹா பகுதிகளில் அவசர நீர்விநியோகத் தடை!

June 19, 2026
பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
செய்திகள்

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

June 19, 2026
செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு
செய்திகள்

செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு

June 19, 2026
அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?
செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?

June 19, 2026
Next Post
இதய அறைகளில் இரத்தக்கசிவு ;யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவிக்கும் மரணங்கள் தொடர்பில் விளக்கம்

இதய அறைகளில் இரத்தக்கசிவு ;யாழ் போதனா வைத்தியசாலையில் சம்பவிக்கும் மரணங்கள் தொடர்பில் விளக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு