கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பாண்டிருப்பு – தாழவட்டுவான் சந்தி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற சிறிய ரக வட்டா வாகனம், சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் மோதிக் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் வாகன சாரதியும், கடை உரிமையாளரும் மீட்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொலன்னறுவையைச் சேர்ந்த 63 வயதான கமகே சுனில் சாந்த என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், காயமடைந்த கடை உரிமையாளர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








