புஷ்பா 2 ரிலீஸின் போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் இன்று (14) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிக்கட்பள்ளி காவல் நிலையத்திற்கு அழைத்து செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இது குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம், அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனா அளித்த மனு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நேற்று (டிச.13) விசாரணைக்கு வந்தது.
அப்போது, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் மூலம் அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி நம்பள்ளி கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் சஞ்சால்குடா மத்திய சிறையிலிருந்து நடிகர் அல்லு அர்ஜூன் இன்று விடுதலை செய்யப்பட்டார்.