Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்

தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றம்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்று (14) நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானத்தின் நகல் யூன் சுக் இயோலுக்கும், அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்படும் தெரிவிக்கப்படுகிறது.

தென்கொரியாவில் கடந்த 3-ந் தி ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை தென்கொரிய ஜனாதிபதி வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் இயோலை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை தென்கொரிய பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.

ஆனால் அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்ய அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் 5 சிறிய கட்சிகள் இணைந்து மீண்டும் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.

இதில் 204 எம்.பி.க்கள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 85 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதன்படி, தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானம் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானத்தின் நகல் யூன் சுக் இயோலுக்கும், அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்படும்.

இதைத் தொடர்ந்து 180 நாட்களுக்குள், ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்வதா? அல்லது அவருக்கான அதிகாரத்தை திரும்ப வழங்குவதா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும். ஒருவேளை ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யப்பட்டால், அடுத்த 60 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; சிசு உயிரிழப்பு

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; சிசு உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.