நபரொருவர் மரணமடைந்ததன் பின்னர், திடீர் மரண பரிசோதகரால் இதுவரையிலும் வழங்கப்பட்ட மரண
சான்றிதழுக்கு பதிலாக, சர்வதேச தரம் வாய்ந்த புதிய மரண சான்றிதழ் அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்று தெரிவித்த இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம், இதற்கான தீர்மானத்தை
நீதியமைச்சு எடுத்துள்ளது என்றது.
அந்த சங்கத்தின் தலைவர் அனுர ஹேரத், பேராதனை போதனா வைத்தியசாலையின்
கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (20) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
மரணம் நிகழ்ந்தமைக்கான காரணத்தை மட்டுமேகுறிப்பிட்டு இதுவரையிலும் பீ-8 படிவத்தின் கீழ்
வழங்கப்பட்ட மரண சான்றிதழுக்கு பதிலாக, மரணத்துக்கான காரணங்கள் நான்கின் கீழ், 24 காரணங்களை
குறிப்பிட்டு புதிய மரண சான்றிதழ் வழங்கப்படும்.நோயாளி கொடுத்த வைத்திய தகவல்கள், நோயாளர் தொடர்பிலான தகவல்கள், உறவினர்கள் குறித்த விபரங்கள் அதில் அடங்கும். இது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டநியமனங்களுக்கு ஏற்பஉள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கையில் மரண பரிசோதகர் நியமனத்தில் காலாவதியான கோறளை முறைமையை
இல்லாதொழித்து அடுத்த வாரம் முதல் 331 பிரதேச செயலகங்களுக்கும் தலா ஒரு மரண விசாரணைஅதிகாரியை நியமிக்க நீதி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை மரண விசாரணை அதிகாரி சங்கம் தெரிவித்துள்ளது.