சர்வதேச கிரிக்கெட் பேரவை எனப்படும் ஐ.சி.சியானது அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கிற்கு தடை விதித்துள்ளது. அணியின் ஆடும் லெவனில் விதிகளை மீறியதற்காக இவ்வாறு அமெரிக்காவின் தேசிய கிரிக்கெட் லீக்கை (என்.சி.எல்) ஐ.சி.சி தடை செய்துள்ளது.
குறைந்தபட்சம் 7 அமெரிக்க கிரிக்கெட்டைச் சேர்ந்த அல்லது அசோசியேட் வீரர்கள் எல்லா நேரங்களிலும் களத்தில் இருக்க வேண்டும் என்ற விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் லீக் போட்டியில் ஆறு வெளிநாட்டு வீரர்கள் களத்தில் விளையாடி உள்ளனர்.
இதன் காரணமாக எதிர்கால லீக்கை அனுமதிக்க மாட்டோம் என்று ஜெய் ஷா தலைமையிலான ஐ.சி.சி நிர்வாகக்குழு முடிவெடுத்துள்ளது.