Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வைத்தியர் முகைதீன் கொலை;புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

வைத்தியர் முகைதீன் கொலை;புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கியநிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன்,அமல்ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை இன்று செவ்வாய்க்கிழமை (20) அறிவித்தது.

இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.

வவுனியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 20ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அன்றைய பிளட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் இவ் தீர்ப்பிற்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனுமீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.

அந்தவகையில் குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.

குறித்த மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணி அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஓஷதி ஹப்பு ஆராச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர்.

சட்ட மாஅதிபர்சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு
செய்திகள்

பொலிஸ் உடற்கருவி கொள்வனவு கேள்விப்பத்திரத்தில் ChatGPT தகவல்கள்?; வசந்த முதலிகே குற்றச்சாட்டு

September 28, 2026
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்பு!

September 28, 2026
அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்
செய்திகள்

அனோஜனுக்காக முஸ்லிம் எம்.பிக்கள் ஒன்றிணைந்தனர்; கல்முனை விவகாரத்தில் தமிழ் தலைமைகள் அக்கறையுடன் செயற்படவில்லை; ஹரீஸ்

September 28, 2026
யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் TECHNOVATE 2026 புத்தாக்கப் போட்டி

September 28, 2026
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய திருட்டு; 1,770 மில்லியன் என அறிக்கை
செய்திகள்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய திருட்டு; 1,770 மில்லியன் என அறிக்கை

September 28, 2026
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம்; சட்ட மா அதிபர் தீர்மானம்!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம்; சட்ட மா அதிபர் தீர்மானம்!

September 28, 2026
Next Post
வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு