முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் விபுலானந்தருக்கான சிலை திறப்பு விழா நடாத்தப்பட்டது ஏற்றுக்கொள்ளப்படமுடியத விடயமென பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
அந்த வகையிலே பல்வேறு வெளிநாட்டு ஊடகங்களும் இது தொடர்பான பாரிய விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றன.

அந்த அறிக்கைகளில் குறிப்பிடப்படுகின்ற விடயம் என்னவென்றால் விபுலானந்தருக்கோ அல்லது அவர் செய்த பணிகளுக்கோ யாரும் எதிரானவர்கள் இல்லை என்றாலும், அவ்வாறான ஒரு நிகழ்வை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாட்களில் செய்தது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்றும், அதேசமயம் இது தமிழ் தேசியத்திற்கு இழைக்கப்படுகின்ற மாபெரும் துரோகம் என்ற அடிப்படையிலும் தான் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

குறிப்பாக தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற மட்டக்களப்பை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இந்நாட்களிலே விளையாட்டு போட்டி நிகழ்வொன்றிலும் கலந்து கொண்டதாக வந்திருக்கின்ற செய்திகளும் மேலும் கவனத்தை பெற்றுள்ளது.
விபுலானந்தர் சிலை திறப்பு விழா நிகழ்வு தொடர்பான விபரங்களை கேட்பதற்காக மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை.

இது தொடர்பாக பலர் கருத்து தெரிவிக்கின்ற பொழுது, நடந்திருக்கின்ற விடயம் நல்லதாக இருந்தாலும் அதற்க்காக தெரிவு செய்யப்பட்ட தினம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்ற ரீதியிலே செய்திகளும் , காணொளிகளும் வெளிவந்திருக்கின்றன. இந்த அடிப்படையில் வெளிவந்த காணொளி இணைப்போன்று கீழே தரப்படுகிறது.