Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பேத்கர் தொடர்பில் சர்ச்சை கருத்து; பி.ஜே.பி எம்.பியை தாக்கிய ராகுல் காந்தி

அம்பேத்கர் தொடர்பில் சர்ச்சை கருத்து; பி.ஜே.பி எம்.பியை தாக்கிய ராகுல் காந்தி

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் (17) தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் பேசினார். அவர் பேசும்போது, “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது.

அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இவரின் இந்தப் பேச்சு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பி உள்ளதுடன், அமித்ஷா இராஜினாமா செய்யவேண்டும் என்றும் குரல்கள் ஒலித்து வருகிறது.

இதற்கிடையே, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நேற்று (18) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ‘ஜெய் பீம்.. ஜெய் பீம்..’ என முழக்கமிட்டனர். இதனால், அவையை நடத்தமுடியாமல், நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமித்ஷா, தான் அப்படி பேசவில்லை என்றும், செயற்கை நுண்ணறிவு மூலம் காங்கிரஸ் எனது குரலை மாற்றி பதிவிட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் பதவியை அமித்ஷா இராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (19) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து இரத்தம் கொட்டியது.

இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி, “நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, ராகுல் காந்தி என் பக்கத்தில் வந்து ஒரு எம்.பியை என்மீது தள்ளிவிட்டார். அதனால் தான் நான் கீழே விழுந்து என் மண்டை உடைந்தது” என்று தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; ஹிஸ்புல்லா கோரிக்கை

தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்; ஹிஸ்புல்லா கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.