நாட்டைச் சூழ்ந்துள்ள சீரற்ற வானிலை காரணமாகக் கடலில் சிக்கியுள்ள 25 இலங்கை மீன்பிடிப் படகுகள் பாதுகாப்பிற்காக இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘ஒர்னாப்’ சூறாவளி நிலைமையால் இந்தியாவை அண்மித்த கடற்பகுதியில் சிக்கியுள்ள படகுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட கடற்பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான கடற்பகுதிகள் அல்லது துறைமுகங்களை நோக்கி நகருமாறு சம்பந்தப்பட்ட படகுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வானிலை எச்சரிக்கைகள் மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு கடற்றொழில் சமூகத்தினரிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







