Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய (21) வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பு தொடக்கம் காலி, மாத்தறை , ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 – 30 கிலோமீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

பேருவலை தொடக்கம் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 55 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
செய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!

October 28, 2026
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!

October 28, 2026
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!
உலக செய்திகள்

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

October 28, 2026
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!

October 28, 2026
களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!
செய்திகள்

வண்ணாத்திவில்லு வெடிபொருள் வழக்கு; ‘கபூர் மாமா’ என்று அழைக்கப்படும் முஹம்மது ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை!

October 28, 2026
Next Post
அனுர அரசிடம் திருகோணமலை விவசாயிகள் முன்வைத்துள்ள வேண்டுகோள்

அனுர அரசிடம் திருகோணமலை விவசாயிகள் முன்வைத்துள்ள வேண்டுகோள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு