திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் ஒருவர், தனது கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.
கைக்குண்டுகளைத் தம்வசம் வைத்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், 48 மணித்தியால விசாரணைகளின் பின்னர் இன்று திருகோணமலை நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த ஐந்து சந்தேகநபர்களில் ஒருவரே நீதிமன்றத்திற்குள் வைத்து தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தனக்கு எதிராகக் காவல்துறையினர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகக் கூறி மனவேதனையடைந்த நிலையிலேயே அவர் இவ்வாறு நடந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.








