Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் சென்றவர்கள் கைது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் சென்றவர்கள் கைது

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் இருவர் அனுமதி இன்றி உட்பிரவேசித்ததாக அங்கு பாதுகாப்பு பணிக்கு பொறுப்பான அதிகாரியினால் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (23) மாலை முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாட்டிற்கமைய, இருவரையும் கைது செய்த கல்முனை தலைமையக பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கைதானவர்கள் கல்முனை மாநகரில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் பணியாளர்கள் என்பதுடன் வைத்தியசாலை பணிப்பாளரின் முன் அனுமதி இன்றி சுத்தியலுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து வைத்தியசாலையில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடி, முரண்பாடான கருத்துக்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் தெரிவித்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

எனினும், கைதானவர்கள் வழமை போன்று தாங்கள் புதிய ஆண்டிற்கான நாட்காட்டி அரச தனியார் திணைக்களங்களுக்கு கொழுவி அடிப்பதற்கு சென்றதாகவும் அதன் போது இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அவ்வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் குணசிங்கம் சுகுணன் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திகவின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
Next Post
கனடாவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கனடாவில் பனிப்பொழிவு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு