உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் உயர்வு பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்த அச்சம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, கடந்த சில மாதங்களில் இல்லாத அளவிற்கு எண்ணெய் விலை உயர்வை எட்டியுள்ளதாகவும், உலக எரிசக்தி சந்தையில் இதன் தாக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







