இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் தொடருந்து பயணச்சீட்டுக்கள் விற்பனை செய்யும் குழு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் எல்ல பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட குழுவினர் தொடருந்து பயணச் சீட்டுக்களை ஒன்லைனில் ஒரேயடியாக பெற்று பின்னர் அதிக விலைக்கு வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதாக தெரிய வந்துள்ளது.
அவ்வாறான தொடருந்து பயணச்சீட்டுகள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கடைசி நிமிடத்தில் 40,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக எல்ல தொடருந்து நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
எனவே இந்தப்பிரச்சனைக்கு தீர்வுகள் காணப்பட வேண்டுமென எல்ல தொடருந்து நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.