Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அல்பிரட் துரையப்பாவை சுட்டுக்கொன்றது பிரபாகரன்; மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு!

அல்பிரட் துரையப்பாவை சுட்டுக்கொன்றது பிரபாகரன்; மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

முதல் அரசியல் படுகொலை அல்பிரட் துரையப்பா. அவரை சுட்டுக்கொன்றது பிரபாகரன். அதனைத் தூண்டியவர் அமிர்தலிங்கம். யாழ்ப்பாணத்தில் மேடையில் ஒருமுறை அமிர்தலிங்கம் சொன்னார், “துரையப்பாவுக்கு இயற்கை மரணம் நிகழாது”, என்றார். அதைத் தொடர்ந்தே அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார். அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. பிரபாகரன் கடைசி அரசியல் படுகொலை என்பது துரதிர்ஷ்டமானது.- இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடந்த தியாகிகள் நினைவேந்தல் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் பேசுகையில்,“நாங்கள் விடுதலைக்காக போராடியவர்கள் ஒற்றுமையாக செயல்பட்டிருந்தால் எமது இனம் 1983 காலத்துக்கு முன்னர் இருந்த காலத்துக்கு இன்று சென்றிருக்காது. இன்று எங்களை நாங்கள் ஆளும் தனிநாட்டில் இருந்திருப்போம். இந்த நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்கள் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடிமைகளாக இரண்டாம்தர ஒடுக்கப்பட்ட மக்களாக வாழ்ந்ததன் பிரகாரம் அந்த உரிமைக்காக அகிம்சை போராட்டத்தை ஆரம்பித்து ஆயுதப் போராட்டத்துக்கு நாங்கள் வலிந்து தள்ளப்பட்டு 2009 மே 18 அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.

ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்தில் மிதவாத கட்சியான ஒரு கட்சி மக்களின் உரிமைக்காக போராடியது. அந்த அகிம்சை போராட்டத்தில் நம்பிக்கை இழந்து அதில் வீறு கொண்டு எழுந்த இளைஞர்கள் விடுதலை போராட்டத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.

வெளி நாடுகளில் படித்துக்கொண்டிருந்தவர்கள் இணைந்தனர் அதில் ஒருவர்தான் ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் பத்மநாபா. அவருடன் 13 பேர் உயிரிழந்தனர். இந்த நாட்டிலே 1983 இல் இடம் பெற்ற மிக மோசமான இன அழிப்புக்கு பின்னர் விடுதலை போராட்டம் வீறு கொண்டு எழுந்தது, பல போராட்ட இயக்கங்கள் விடுதலை வேண்டிய ஆயுதம் ஏந்தி போராடினாலும் முன்னணியில் 5 இயக்கங்கள் போராடின. இதில் 3 இயக்கங்கள் தேசிய முன்னணியாக ஒற்றுமையாக செயல்பட 1984இல் அடி எடுத்து வைத்த பின்னர் 1985 விடுதலை புலிகளும் முன்னணியில் இணைந்தனர். 1983 இல் இருந்து 87 வரை உலகத் தமிழர் இடையே பேசும் பொருளாக இருக்கும் 13ஆவது திருத்த சட்டம் அதன் ஊடாக வந்த மாகாண சபை முறைமை சட்டம் ஏற்படுத்தப்பட்டு – 1983 – 1987 இற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரே ஒரு போராட்ட இயக்கத் தலைவர் கொல்லப்பட்டார். தமிழீழ விடுதலை இயக்ககத்தின் தலைவர் சிறீ சபாரத்தினம் 1986 மே 6ஆம் திகதி
கொல்லப்பட்டார்.

1987ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலம் மாகாண சபை முறைமை வந்தது. அந்த மாகாண சபையை நடத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்தது – அதனை ஏற்றுக் கொண்டனர்.இடைக்கால நிர்வாக சபைக்கு 11 பேர் நியமிக்கப்பட வேண்டிய தேவை இருந்தது. அதில் 7 பேரை புலிகள் நியமித்தனர் ஏனைய 4 பேர் இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டனர்.

அதன்பின்னர் அதன் தலைமைத்துவம் யாரிடம் செல்லவேண்டும் என்ற சிக்கல் எழுந்ததால் அது நிறைவேறாது சென்றது. கொல்லப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அமிர்தலிங்கத்திடம் மாகாண சபை முறைமையை ஏற்குமாறு கேட்ட போது அதனை அவர் மறுத்தார். அவ்வாறே அதனை
ரெலோவும் ஏற்கவில்லை இந்த நிலையில் ஈ. பி. ஆர். எல். எவ். தலைவர் பத்ம நாபா எதிர்கால சிந்தனையுடன் இதனை ஏற்றுக்கொண்டதையடுத்து இணைந்த வட, கிழக்கு மாகாண சபை உருவாகியது.

விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸாவுடன் பேச்சில் ஈடுபட்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் அண்ணன் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சாம் தம்பி முத்து அவரது மனைவி உட்பட தமிழர் விடுதலைக் கூட்டணியைச்
சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.

அன்று 13ஆம் திருத்த சட்டத்தை ஏற்று இருந்தால் இன்று அது பேசும் பொருளாக இருந்திருக்காது. இந்த 1987 மாகாண சபை முறைமை வந்தது தொடக்கம் 2009 மே 18 வரை ஜே. ஆர் ஜெயவத்தனவின் கையை முறுக்கி
பலாத்காரமாக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்த இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இந்த நாட்டிலே எத்தனை தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.

வடக்கு, கிழக்கிலே முதலாவது அரசியல் படுகொலை முன்னாள் யாழ். நகர மேயர் அல்பிரட் துரையப்பா.
அவரை சுட்டுக் கொன்றது புலிகளின் தலைவர் பிரபாகரன். அதை தூண்டியது அண்ணன் அமிர்தலிங்கம். அவர், யாழ்ப்பாணத்தில் மேடை ஒன்றில் பேசும் போது அல்பிரட் துரையப்பாவுக்கு இயற்கை மரணம் கிடையாது என பேசியிருந்தார் அதை தொடர்ந்துதான் அல்பிரட் துரையப்பா கொல்லப்பட்டார்.
அல்பிரட் துரையப்பா முதலாவது அரசியல் படுகொலை. ஆனால், நாட்டிலே இறுதியான அரசியல் படு
கொலை 2009 மே 18 பிரபாகரன் என்பது துரதிர்ஷ்டம். 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கேட்கின்றோம். ஆனால், அது இறுதி தீர்வல்ல. எங்கள் மக்களின் அரசியல் அபிலாசைகள் 13 இல் உள்ளடக்கப்படவில்லை. அது மேலும் செல்ல வேண்டும் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!
செய்திகள்

இலங்கையை அச்சுறுத்தும் வலுவான எல் நினோ; 75 ஆண்டுகளில் மோசமான நிலைக்கு வாய்ப்பு!

September 12, 2026
பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!
செய்திகள்

பொலன்னறுவை – அநுராதபுரத்தில் இன்று அரசும் எதிர்க்கட்சியும் பேரணி!

September 12, 2026
வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கில் இராணுவ வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க கலந்துரையாடல்!

September 12, 2026
சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!
செய்திகள்

சாவகச்சேரியில் அநுர அரசுக்கு எதிராக கண்டன உண்ணாவிரதப் போராட்டம்!

September 12, 2026
Next Post
குரல் கொடுப்பதை ஒருபோதும் கனடா நிறுத்தாது; இலங்கை தொடர்பில் ஜஸ்ரின் ட்ரூடோ!

குரல் கொடுப்பதை ஒருபோதும் கனடா நிறுத்தாது; இலங்கை தொடர்பில் ஜஸ்ரின் ட்ரூடோ!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.