Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏலம் விடும் வாகனங்களை அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய முடியாது

ஏலம் விடும் வாகனங்களை அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்ய முடியாது

2 years ago
in செய்திகள்

அதிக எஞ்சின் திறன் கொண்ட வி8 உள்ளிட்ட சொகுசு வாகனங்களை ஏலம் விட்டு, அதற்கான வருமான விபர அறிக்கையை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரச திணைக்களங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சின் செயலாளரால், அரச திணைக்களங்களின் தலைவர்களுக்கு குறித்த விடயம் சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

1800 சிசிக்கு மேல் உள்ள எஞ்சின் திறன் கொண்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 2300 சிசிக்கு மேல் உள்ள எஞ்சின் திறன் கொண்ட டீசல் வாகனங்கள், சுங்கத்தின் அட்டவணை (அ) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைந்த (எச்.எஸ்) 87.03 பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏலம் விடப்படும் வாகனங்களை எந்தவொரு அரசாங்க நிறுவனமும் கொள்வனவு செய்யக்கூடாது எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துக்கள் மீதான முறைகேடுகளைத் தடுப்பதற்கும், அரசு நிதியை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கும், அனைத்து அரசு வாகனங்களையும் முறையாகப் பயன்படுத்துவதை ஆவணப்படுத்துவதற்கும், பராமரித்தல் மற்றும் பதிவு செய்வது அனைத்து அரசு நிறுவன தலைவர்களின் கட்டாயப் பொறுப்பாகும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனத்தின் தலைமை கணக்கு அதிகாரியால் வாகனங்களின் தேவையை மதிப்பீடு செய்த பிறகு, பொருளாதார ரீதியாக இலாபம் இல்லாத மற்றும் நிறுவனத்தின் பயன்பாட்டிற்கு தேவையில்லாத மோட்டார் வாகனங்கள் அரசாங்க கொள்முதல் முறையின் மூலம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
வவுணதீவில் குற்றவாளிகளுடன் மது அருந்திய பொலிஸ் கொஸ்தாப்பர் பணியில் இடைநீக்கம்
செய்திகள்

வவுணதீவில் குற்றவாளிகளுடன் மது அருந்திய பொலிஸ் கொஸ்தாப்பர் பணியில் இடைநீக்கம்

October 2, 2026
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி
செய்திகள்

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி

October 2, 2026
மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு
காணொளிகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு

October 2, 2026
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

October 2, 2026
ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!
செய்திகள்

ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

October 2, 2026
Next Post
மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் தேயிலை; கைப்பற்றிய அதிரடிப்படை

மனித பாவனைக்குதவாத 12000 கிலோ கிராம் தேயிலை; கைப்பற்றிய அதிரடிப்படை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு