கொலம்பியாவில் கடந்த 10ஆம் திகதி ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, கலி நகரில் இடம்பெற்ற கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் தனது செல்ல நாயை காப்பாற்றுவதற்காக உயிரை தியாகம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான வழக்கறிஞர் லென்னி பெர்னாண்டஸ், கட்டிடம் இடிந்து விழுந்தபோது தனது செல்ல நாய் சாலமோனை பாதுகாக்க தனது உடலால் அதனை மறைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளுக்குள் தேடுதல் நடத்தியபோது, லென்னியின் உடல் சாலமோனை பாதுகாத்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. லென்னியை காப்பாற்ற முடியாத நிலையில், அவரது செல்ல நாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டது.
விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்டவராக அறியப்பட்ட லென்னியின் இந்த இறுதி செயல், அவரை அறிந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.







