சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு முன்னணி தனியார் வங்கிகளின் முகாமையாளர்களும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை பரிசீலித்த நீதவான், நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த நிதி பரிமாற்றம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








