Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறு கோரி மனு

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சம் அடைந்தவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்குமாறு கோரி மனு

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் மார்க்கமாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கைத் தமிழர்கள், தங்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியாளரிடம் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைத் தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடையத் தொடங்கினர்.

இதுவரை 309 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக ஏதிலிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொருளாதார நெருக்கடி காரணமாகத் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழர்களை ஏதிலிகளாக இந்திய அரசாங்கம் இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் அவர்களுக்கான எந்த விதமான நிவாரணங்களும் கிடைக்கப் பெறுவதில்லை.

இந்தநிலையில் வருமானமின்றி தவிக்கும் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் மீண்டும் சட்டவிரோதமாகக் கடல் வழியாக அண்மையில் இலங்கைக்குத் திரும்பி வந்துள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏதிலிகளாக பதிவு செய்யாமல் உள்ள 13 குடும்பத்தினரை சேர்ந்த தங்களைப் படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியாளரை சந்தித்துப் பாதிக்கப்பட்ட இலங்கை ஏதிலிகள் மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு
செய்திகள்

திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

October 1, 2026
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
செய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

October 1, 2026
தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!
செய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!

October 1, 2026
துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்
உலக செய்திகள்

துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்

October 1, 2026
வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
Next Post
இலங்கை மக்களின் தரவுகளை இந்திய அரசிடம் வழங்கத் திட்டம்

இலங்கை மக்களின் தரவுகளை இந்திய அரசிடம் வழங்கத் திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு