போர்த்துக்கல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது தொழில்முறை கால்பந்து வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய Vogue பேட்டியில், கால்பந்தில் இதுவே தனது கடைசி ஆண்டாக இருக்கக்கூடும் என 41 வயதான ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 2026 உலகக்கிண்ணப் போட்டித் தொடர் தனது கடைசி உலகக்கிண்ணமாக இருக்கும் என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
25 ஆண்டுகளுக்கும் மேலான தனது கால்பந்து பயணத்திற்கு பின்னர் சிறப்பான மரபை விட்டுச் செல்ல விரும்புவதாகக் கூறிய அவர், ஓய்வுக்குப் பிறகு குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடவும், பயணம் மேற்கொள்ளவும், தனக்கு பிடித்த பேடல் விளையாட்டில் ஈடுபடவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சவூதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, தனது எதிர்காலத்தை ஏற்கனவே திட்டமிட்டுள்ளதாகவும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.








