Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!

விபத்தால் கொந்தளித்த மக்கள் – கண்டெய்னர் லொறி தீக்கிரை; சாரதி கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு – கட்டானா பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

அதிகாலை 1.45 மணியளவில் அலுமினியம் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள், நீர்கொழும்பு – தாகொன்ன வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய சிரிவர்தன ஆராச்சிலாகே தலிஷ் நிம்நெத் சிரிவர்தன மற்றும் 19 வயதுடைய விஜேசுந்தர அப்புஹாமிலாகே கவிந்து ஹஷான் சோமதிலக என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் கண்டெய்னர் லொறிக்கு தீ வைத்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த கட்டானா பொலிஸாரும், நீர்கொழும்பு மாநகரசபை தீயணைப்புப் பிரிவினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நிலைமையை சீர்செய்தனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களும் நீர்கொழும்பு மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், விபத்துடன் தொடர்புடைய கண்டெய்னர் லொறியின் சாரதியான பன்னில – தென்ன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டானா பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!

பன்றி வளர்ப்போருக்கு அரசின் புதிய அறிவிப்பு; ஆகஸ்ட் ‘பன்றிக் காப்பீட்டு மாதம்’ என பிரகடனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு