Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும்; எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

இலங்கையில் ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும்; எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி

2 years ago
in செய்திகள்

இலங்கையில் உர மானியத்துக்கு உரித்துடைய ஏனைய விவசாயிகளுக்கு எப்போது மானியம் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினைகளை முன்வைக்கும் நடவடிக்கைகள் நிமித்தம் சஜித் பிரேமதாச நேற்று (10) இவ்வாறு இந்த பிரச்சினையை முன்வைத்து கருத்துத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் கூற்றுப்படி 9,96,992 விவசாயிகள் உர மானியத்திற்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். இவர்களுக்கு உர மானியமாக 15,000 ரூபா, 10,000 ரூபா என 2 கட்டமாக மொத்தம் 25,000 ரூபா வழங்கப்படவுள்ளன.

இதுவரை 684,194 விவசாயிகள் 15,000 ரூபா மானியத்தைப் பெற்றுள்ளனர். அதாவது 69% ஆனோருக்கு இது கிடைத்துள்ளது. 31% ஆனோருக்கு அதாவது 312,798 பேருக்கு இது இன்னும் கிடைக்கவில்லை.

15,000 ரூபா மானியத்திற்கு உரித்துடைய ஏனைய 312,798 விவசாயிகளுக்கு எப்போது இந்த மானியம் வழங்கப்படும்? அவ்வாறு மானியம் வழங்கப்படும் திகதியை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி என்ற வகையிலும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அரசாங்கத்திடம் முன்வைப்பது எனது பொறுப்பாகும்.

314,956 விவசாயிகளுக்கு அதாவது 32% ஆனோருக்கு மட்டுமே 10,000 ரூபா மானியம் கிடைத்துள்ளது. 682,041 விவசாயிகளுக்கு அதாவது 68% ஆனோருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

10,000 ரூபா மானியத்தை எஞ்சிய 682,041 போருக்கும் வழங்கும் திகதியை அறிய விரும்புகின்றோம்.

இந்த 25,000 ரூபா மானியத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு 24.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 9.9 பில்லியன் ரூபா அதாவது 40% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே முழுத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை
செய்திகள்

யாழில் தீ மூட்டி உயிரிழந்த இரட்டைச் சகோதரிகள்; பொலிஸார் விசாரணை

August 2, 2026
கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு
செய்திகள்

கருவாடு கிலோ விலை 4,000 வரை அதிகரிப்பு

August 2, 2026
சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை
அரசியல்

சிறிதரனின் செயற்பாடுகள் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்; சாணக்கியன் எச்சரிக்கை

August 2, 2026
புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை
செய்திகள்

புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 05ஆம் திகதி முதல் தடை

August 2, 2026
யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
செய்திகள்

யாழில் பட்டாசு வெடித்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

August 2, 2026
Next Post
மாலைத்தீவு துறைமுக அதிகாரசபை வடக்கு பிராந்தியத்தில் துறைமுக திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம்

மாலைத்தீவு துறைமுக அதிகாரசபை வடக்கு பிராந்தியத்தில் துறைமுக திட்டத்தை அபிவிருத்தி செய்வதில் ஆர்வம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு