யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய இரட்டைச் சகோதரிகள் இருவர் தீ மூட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (01) வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த இருவரும் தமக்குத் தாமே தீ மூட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி இன்று (02) அதிகாலை இருவரும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்பதற்கு முன்னர், வாழ்வில் விருப்பமின்மை காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழந்த இருவரின் மரணம் தொடர்பான காரணங்கள் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.








