Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மோடி – ரணில் சந்திப்பில் எந்த பயனுமில்லை; இந்திய நாளிதழில் சுட்டிக்காட்டு!

மோடி – ரணில் சந்திப்பில் எந்த பயனுமில்லை; இந்திய நாளிதழில் சுட்டிக்காட்டு!

3 years ago
in செய்திகள்

“இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளுக்குள் தமிழர் பிரச்னை தொடர்பிலான அதன் வரலாற்று ரீதியான அக்கறைகளை இந்திய அரசாங்கம் கொண்டுவருவதை இனிமேலும் கொழும்பு வரவேற்கப்போவதில்லை என்பதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு கூறும் மிகப்பெரிய செய்தி.”

இந்தியாவின் முக்கியமான தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘தி இந்து’ இலங்கை ஜனாதிபதியின் பயணம் குறித்து நேற்று செவ்வாய்க்கிழமை தீட்டியிருக்கும் ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு கூறியிருக்கிறது. “இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கூட்டாக வெளியிடப்பட்ட ‘தொலை நோக்கு ‘ அறிக்கையில் எதிர்காலத்துக்கான விரிவான திட்டங்கள் குறித்து விளக்கம் தரப்பட்டிருக்கின்ற போதிலும், விக்கிரமசிங்கவின் பயணத்தின் போது வெளியிடப்பட்ட எந்தவோர் எழுத்துமூல ஆவணத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை மதிப்பதாக இலங்கையால் முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் பற்றியோ அல்லது இந்திய மீனவர்கள் கைது செய்யபடுவது தொடர்பிலான பிரச்னை குறித்தோ எதுவும் கூறப்படவில்லை” என்றும் தி இந்து சுட்டிக்காட்டியுள்ளது.

‘இன்னமும் பூரணமாகவில்லை’ (Still Incomplete) என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்த ஆசிரியர் தலையங்கம் இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் தமிழர் பிரச்னையால் பிணைக்கப் பட்டிருக்கின்றன என்பதை வலியுறுத்து வதாக அமைந்திருக்கிறது.”“பிரதமர் மோடி மாத்திரமே தனது உரையில் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் மாகாண சபை தேர்தல்களின் அவசியம் குறித்தும் இலங்கையின் தமிழ் சமூகத்தின் கௌரவமும் கண்ணியமும் கொண்ட வாழ்வை உறுதிப்படுத்த வேண்டிய தேவை குறித்தும் அழுத்தமான வேண்டு
கோளை விடுக்கவேண்டி ஏற்பட்டது.

“ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்கும் ஆளும் சிறீ லங்கா பொதுஜன பெரமுன இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நீண்ட காலமாக பதற்றத்துக்கு காரணமாக இருந்து வரும் இனப்பிரச்னையுடன் தொடர்புடைய இந்த விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்கு அவரின் அரசாங்கத்துக்கு ‘தேர்தல் ஆணை’ கிடையாது என்று தெளிவாகக் கூறியிருக்கிறது.“விக்கிரமசிங்க டில்லியில் வெளியிட்ட கருத்துகளிலோ அல்லது கூட்டு அறிக்கையிலோ இந்த முக்கிய விடயங்கள் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படாதமையே இரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் மூலமான மிகப்பெரிய செய்தியாக இருக்கக்கூடும். “புதுடில்லிமீது வேறு விவகாரங்களுக்காக இலங்கை தங்கியிருந்தாலும் கூட, இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளுக்குள் தமிழர் பிரச்னை தொடர்பான அதன் வரலாற்று ரீதியான அக்கறைகளை கொண்டு வருவதை இனி மேலும் இலங்கை விரும்பப்போவதில்லை என்பது உணர்த்தப்பட்டிருக்கிறது.

“இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வலிமையான சகோதரத்துவ உறவுகள் நீடித்துவந்திருந்தாலும்கூட கடந்த காலத்தில் வரலாறு உறவுகளில் இடறல்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பிரச்னைகளுக்கு இணக்கமான ஒரு தீர்வை உள்ளடக்காத எதிர்காலத்துக்கான எந்தவொரு நோக்கும் பூரணத்துவம் அற்றதாகவே கருதப்படும்”, என்றும் தி இந்து கூறியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
13 ம் திருத்த சட்டம் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு அல்ல; முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவிப்பு!

13 ம் திருத்த சட்டம் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு அல்ல; முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.