Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாங்கள் இடையில் எழுந்து போகாமல் இருப்பது ஜனாதிபதியின் கையிலே உள்ளது; சர்வகட்சி கூட்டம் தொடர்பில் சஜித்!

நாங்கள் இடையில் எழுந்து போகாமல் இருப்பது ஜனாதிபதியின் கையிலே உள்ளது; சர்வகட்சி கூட்டம் தொடர்பில் சஜித்!

2 years ago
in செய்திகள்

“ஜனாதிபதியுடனான சர்வகட்சி கூட்டத்தில் நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க் கட்சி பங்கேற்றாலும், இந்தக் கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்த நிமிடமே குறித்த பேச்சு மேசையை விட்டு ஐக்கிய மக்கள் சக்தி வெளியேறும்.”- இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அரசியல் ஏமாற்று வித்தைகள் இல்லாமல் சரியான முறையில் கலந்துரையாடலுக்கு ஜனாதிபதியும் அரசும் வரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.‘பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் பிபில மெதகம தேசிய பாடசாலைக்கு பேருந்து வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்திக்கு கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது சர்வகட்சி மாநாடு என்று அறியக் கிடைக்கின்றது. தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இடையே பொது நிகழ்ச்சி நிரல், வேலைத்திட்டம், கருத்து ஒற்றுமை, கூட்டுப் பொறுப்புடன் ஒரு கருத்துடன் செயல்படும் நிலைப்பாடுகள் இல்லை.நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து எதிர்க்கட்சி இந்தக் கலந்துரையாடலுக்குச் சென்றாலும், இந்தக் கலந்துரையாடல் வழமையான அரசியல் ஏமாற்று வித்தை என்று கருதும் பட்சத்தில் அந்நிமிடமே குறித்த கலந்துரையாடல் மேசையை விட்டு வெளியேறும். அரசின் பேச்சு நேர்மையுடன் நடந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். வெற்றிபெற வேண்டுமானால் பேச்சுகள் தூய்மையான நோக்கத்துடன் நடக்க வேண்டும். அது அரசியல் ஏமாற்று வித்தையாக இருக்கக்கூடாது. நாட்டு நலனுக்காகச் செய்யப்படும் பணியாக பேச்சு அமையப் பெறுவதாக இருக்க வேண்டும்.

அரசிடம் தெளிவான வேலைத்திட்டம் இருக்க வேண்டும். இந்தக் கலந்து ரையாடல்களுக்கு நாம் அழைக்கப்பட்ட போதிலும், நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் குறித்து எமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் பக்கம் இருந்து எதிர்க்கட்சி இதில் கலந்துகொள்கின்றது.இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 134 உறுப்பினர்களுக்கும்
இடையில் பல கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன. கலந்துரையாடலுக்கு வருவதற்கு முன்னர் கருத்து வேறுபாடுகளைச் சமாளித்து ஒரு நிலைப்பட்ட கருத்தொற்றுமைக்கு அவர்கள் வரவேண்டும்.” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு
செய்திகள்

பிள்ளையானிடம் சிக்கிய சட்லைட் தொலைபேசி; அசாத் மௌலானா தொடர்பில் அதிரடி முடிவு

June 8, 2025
மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு
செய்திகள்

மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

June 8, 2025
அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
Next Post
சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இல்லை; சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி!

சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் எனக்கு இல்லை; சர்வ கட்சி மாநாட்டில் ஜனாதிபதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு