Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்; விசாரணையை நடத்துமாறு திருச்சபை கோரிக்கை

கொழும்பு பொரள்ளை தேவாலய குண்டு வைப்பு சம்பவம்; விசாரணையை நடத்துமாறு திருச்சபை கோரிக்கை

2 years ago
in செய்திகள்

கொழும்பு பொரள்ளையில் அமைந்துள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்தில், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற வெடிகுண்டு சம்பவம் குறித்து புதிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

2022 ஜனவரி 11 அன்று தேவாலயத்திற்குள் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று(12) காலை போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக தேவாலயத்தின் பராமரிப்பாளர் அப்போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

எனினும் இந்தச் செயல்களால் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் திருச்சபை பின்னர் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தநிலையில் நேற்று (12) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த தேசிய கத்தோலிக்க தகவல் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த, இந்த சம்பவம் குறித்து புதிய விசாரணை நடத்துமாறு, தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம், திருச்சபை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியின் போது ஒரு சந்தேகநபர் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்தேகநபர் குறித்து தற்போதைய அரசாங்கம் என்ன செய்யும் என்பதைப் பார்க்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியவை என்றும் அருட்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சம்வத்தின் பின்னர், மாலையில் பதிவான சிசிடிவி காட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்று தென்னகோன் அறிவுறுத்தியிருந்தார்.

எனினும் காலையில் பதிவான மற்றொரு காணொளியில், குற்றவாளி,தேவாலயத்திற்குள் வெடிகுண்டை வைப்பது கண்டறியப்பட்டது என்று அருட்தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!
செய்திகள்

அனோஜனை விடுவிக்க ஜனாதிபதியுடன் அவசர சந்திப்புக்கு தமிழரசுக் கட்சி கோரிக்கை!

September 24, 2026
புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!
செய்திகள்

புத்தள – மொனராகலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஆறு பேர் வைத்தியசாலையில்!

September 24, 2026
Next Post
குருக்கள் மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவ நிகழ்வு

குருக்கள் மடம் கிருஷ்ணன் ஆலயத்தில் திருப்பாவை தீர்த்தோற்சவ நிகழ்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு