Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சீன உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர்கள் கேள்வி

சீன உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர்கள் கேள்வி

2 years ago
in செய்திகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது, அந்நாட்டு ஊடக நிறுவனங்களுடன் உடன்படிக்கை செய்துக்கொள்ள அரசாங்கம் எடுத்த முடிவு குறித்து இலங்கையின் ஊடகவியலாளர் குழுக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

திறன் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட சீன ஊடக நிறுவனங்களுடன் கூட்டாண்மைக்கான திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டதாக அரசாங்கம் கடந்த வாரம் கூறியிருந்ததைத் தொடர்ந்தே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் அத்துடன் ஒப்பந்தங்கள் கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

சீன ஊடகங்கள் பெரும்பாலும் சுயாதீன ஊடகங்கள் அல்ல, அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களாகவே பார்க்கப்படுகின்றன.

இலங்கை ஊடகவியலாளர்கள் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக, குறிப்பாக அரசு ஊடகங்களின் சீர்திருத்தங்களை எதிர்பார்க்கும் நேரத்தில், அரசாங்கத்தின் இந்த முடிவு மிகவும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய ஒப்பந்தங்கள் இலங்கையின் ஊடக நிலப்பரப்பில் வெளிநாட்டு செல்வாக்கிற்கு வழி வகுக்கும் என்று சம்பத் எச்சரித்துள்ளார்.

இந்தநிலையில், நாட்டின் ஊடக சமூகத்துடனான ஆலோசனைகளை அரசாங்கம் புறக்கணிப்பதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லாதது ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், சுதந்திர ஊடக இயக்கத்தின் லசந்த டி சில்வாவும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்

கையெழுத்திடுவதற்கு முன்னர், ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்கள் அரசாங்கத்தின் ஊதுகுழல்களாக இல்லாமல் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையின் மத்தியில் அரசாங்கம் எதனை செய்ய விரும்புகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களை எளிதாக்குவதற்காக இலங்கையின் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் அரசுக்குச் சொந்தமான சின்ஹவா செய்தி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தங்களில் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒஃப் சிலோன் லிமிடெட் (லேக் ஹவுஸ்) மற்றும் சின்ஹவா இடையேயான கூட்டாண்மைகள், அரசாங்க தகவல் திணைக்களம், இலங்கை ரூபவாஹினி கோர்ப்பரேசன் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்புகள் ஆகியவை அடங்கும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு
செய்திகள்

கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான வரணியா-றியாசா முதலாம் தரத்திற்கு தரமுயர்வு

September 24, 2026
நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை
செய்திகள்

நுவரெலியா, ஹட்டன் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

September 24, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
Next Post
ஈழத்தமிழர்கள் இன்னும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டுமா ; கேள்வி எழுப்பும் பிரபல தமிழ் தொழில் அதிபர்

ஈழத்தமிழர்கள் இன்னும் அதே கட்டுக்குள் இருக்க வேண்டுமா ; கேள்வி எழுப்பும் பிரபல தமிழ் தொழில் அதிபர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு