கஞ்சாவை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இளம் ஜோடியொன்றை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் – சிலாபம் வீதியின் பத்துளு ஓய பொலிஸ் வீதித் தடையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, அவர்களிடம் இருந்து சுமார் 17 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 26 வயதுடைய ஆண் ஒருவரும் 22 வயதுடைய பெண் ஒருவருமாவர். இருவரும் ராஜாங்கனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட கஞ்சா தனமல்வில பிரதேசத்தில் பயிரிடப்பட்டதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








