மாத்தறை, கொட்டவில பகுதியில் உள்ள வீட்டொன்றில் இருந்து T56 துப்பாக்கி மற்றும் பிற உபகரணங்களுடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் காலி பிரிவு அதிகாரிகள் நடாத்திய சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 60 தோட்டாக்கள், 2 மெகசின்கள், 1 கல்கடாஸ் துப்பாக்கி ஒன்றும் மற்றும் அதற்கான 2 தோட்டாக்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.