களனி பல்கலைக்கழகத்திற்கு புதிய உபவேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய களனி பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.