Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊழல் செய்யும் அதிகாரிகள்; சாணக்கியன் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு ஊழல் செய்யும் அதிகாரிகள்; சாணக்கியன் குற்றச்சாட்டு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த கால அரசுகள் கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகயிருந்தவரும் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீ.மு. இராசமாணிக்கத்தின் பிறந்த தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையின் புறநகர் பகுதியில் உள்ள வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

சீ.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நாவற்கேணியில் நடைபெற்றது.
போதகர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சீ.மு.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வின்போது நூறுக்கும் அதிகமான மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
புதிய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கும் செயற்பாட்டினை இன்னும் ஆரம்பிக்கவில்லை. 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டுவரையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் வரைவில் தாங்கள் இணங்கிய விடயங்களைக்கொண்டு புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தாலும் கூட தற்போது அவர்கள் என்ன மனநிலையிலிருக்கின்றாகள் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது.

அந்தவகையில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுவில் அரசாங்கத்திற்கு புதிய அரசியலமைப்பினை விரைவுபடுத்துவதற்கு பாரிய அழுத்தங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.அரசியலமைப்பு எவ்வாறு அமையவேண்டும் என்பதில் இலங்கை தமிழரசுக்கட்சி 75 வருடமாக பல முன்னெடுப்புகளை முன்னெடுத்துவந்துள்ளது. அந்த வகையில் பல வடிவங்களில் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஆராய்ந்து அரசாங்கத்துடனும் இவ்விடயங்களை முன்னெடுப்பதற்காக ஏழுபேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. ஏழுபேர் கொண்ட குழு புதிய அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களை முன்னெடுப்பதற்காக தீர்மானம் எடுத்திருந்தது.

கட்சியின் தீர்மானங்களை மீறி வேறு கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்கள், வேறு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர்கள், உயிரிழந்தவர்கள், வெளிநாடு சென்றவர்கள் மற்றும் விருப்பமில்லாதவர்களை மாற்றி அவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிப்பது தொடர்பாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதேபோன்று கட்சியிலே ஒழுக்காற்று விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் பேசப்பட்டது. சிலருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது தொடர்பில் சிலருக்கு இருந்த சந்தேகங்கள் தொடர்பிலும் பூரணமான பதில்கள் வழங்கப்பட்டன. கட்சித் தீர்மானத்தை மீறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் தொடர்வதாகவும் சொல்லப்பட்டது. நான் 2020ஆம் ஆண்டிலிருந்துதான் மத்திய செயற்குழு உறுப்பினராக இருக்கின்றேன்.முதலாவது முறையாக ஒரு அமைதியான ஆக்கபூர்வமான மத்திய செயற்குழுக் கூட்டத்தை நான் கண்டிருந்தேன்.

நாங்கள் ஒற்றுமையாக விவாதங்களை முன்னெடுத்து ஒற்றுமையாக சில தீர்மானங்களை எடுக்கும் நிலையிருந்தது.

தமிழரசுக்கட்சி ஓரு ஆரோக்கியமான பாதையில் செல்கின்றது.சிலருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.கட்சியென்றால் ஒரு கட்டுப்பாடு இருக்கவேண்டும்.ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து சிலர் முட்டாள்தனமான கருத்துகளையெல்லாம் முன்வைப்பார்கள்.ஆனால் ஒரு கட்சியானது கட்டுக்கோப்புடன் செயற்படவேண்டும்;.தமிழரசுக்கட்சியை எதிர்காலத்தில் இன்னும் பலமானதாக கட்டியெழுப்புவோம்.உள்ளுராட்சிமன்ற தேர்தல் அதற்கு ஆரம்பமாகயிருக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சில ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு பதவி உயர்வுகளும் தங்களது இருப்புகளை பாதுகாப்பதற்கான செயற்பாடுகளை அவதானிக்கமுடிகின்றது. இந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் எனது கடுமையாக பேசவுள்ளதுடன் ஜனாதிபதியை சந்தித்தும் இது தொடர்பில் பேசவுள்ளேன்.

அதேபோன்று கடந்தகாலத்தில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான பால்மாவினை கொள்ளையடித்த பிரதேச செயலாளர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதுடன் பிள்ளையான் காணிகளை அபகரிப்பு செய்ய உதவிய பிரதேச செயலாளர்களுக்கு பதவி உயர்வுகள் எல்லாம் வழங்கப்படப்போவதாக அறிகின்றோம்.ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதியாக செயற்பட்டு இந்த விடயங்களுக்கு சிறந்த முடிவுகளை வழங்கவேண்டும்.

@battinaatham

#battinaatham #srilanka #batticaloa #anurakumaradissanayaka #hariniamarasuriya #sivanesathuraisanthirakanthan #pilaiyan

♬ original sound – battinaatham – battinaatham
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
அமெரிக்கா ஆண் மற்றும் பெண் பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும்; அதிரடி அறிவிப்புக்களை வெளியிடும் டிரம்ப்

அமெரிக்கா ஆண் மற்றும் பெண் பாலினங்களை மட்டுமே அங்கீகரிக்கும்; அதிரடி அறிவிப்புக்களை வெளியிடும் டிரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.