Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனவரி மாத இறுதியில் லண்டனுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கைது உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயமானது ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.

1980களின் பிற்பகுதியில், குறிப்பாக பட்டலந்த சித்திரவதைக் கூடங்களுடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்தநிலையில் அவருக்கு எதிரான கைது உத்தரவுக்கான முயற்சி, உலகளாவிய அதிகார வரம்பு என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்று குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சித்திரவதை போன்ற கடுமையான சர்வதேச குற்றங்களை தனிநபர்கள், எங்கு மேற்கொண்டிருந்தாலும், இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில், அவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் ஒரு சட்டக் கோட்பாடாக இது அமைந்துள்ளது.

இந்த நடவடிக்கை, முன்னாள் சிலி சர்வாதிகாரி அகஸ்டோ பினோசேவின் வழக்குடன் இணையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆட்சியின் குற்றங்களுக்காக அவர் 1998 இல் லண்டனில் உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் கைது செய்யப்பட்டார்.

குறிப்பாக, உலகத் தலைவர்களை அவர்களின் பதவிக்காலத்தில் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வைப்பதில் இந்த உலகளாவிய அதிகார வரம்பு சட்டம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கு அருகிலுள்ள பியகம தொகுதியில் அமைந்துள்ள பட்டலந்த தடுப்பு மையம், இலங்கையின் 1987–1989 மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கிளர்ச்சியின் போது பேசப்பட்ட ஒன்றாக இருந்தது.

அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை கிளர்ச்சியை வழிநடத்திய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் குழுவான ஜே.வி.பி.யுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவோரை தடுத்து வைக்க, விசாரிக்க மற்றும் சித்திரவதை செய்ய இலங்கை பொலிஸின் நாசவேலை எதிர்ப் பிரிவு, இந்த முகாமை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும் இந்த குற்றச்சாட்டில் அப்போதைய அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க, தம்மீதான நேரடி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
Next Post
மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலை; விவசாயிகள் கோரிக்கை

மட்டக்களப்பில் கவனிப்பாரற்று காடுகளாகியுள்ள நெல் களஞ்சியசாலை; விவசாயிகள் கோரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு