Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணில் மீண்டும் ஜனாதிபதியாக கையில் எடுத்திருக்கும் ஆயுதமா 13 ? ; மனோ ஏன் அப்படி கூறினார்?

ரணில் மீண்டும் ஜனாதிபதியாக கையில் எடுத்திருக்கும் ஆயுதமா 13 ? ; மனோ ஏன் அப்படி கூறினார்?

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக பொலிஸ் அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்தும் முயற்சிக்கு சர்வகட்சி மாநாட்டில் கடும் எதிர்ப்பு காணப்பட்டது. புதிய ஜனாதிபதி, புதிய பாராளுமன்றம் எனும் நிலைமாறல்களுக்குப் பின்னர்தான் தேசிய இனப் பிரச்னை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்படமுடியும்.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற
உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று முன்தினம் மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வகட்சி மாநாடு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-13ஆவது திருத்தத்தை முழுமையாகப் பொலிஸ் அதிகாரத்துடன் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, கெவிது குமாரதுங்க, சரத் வீரசேகர ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்தவேண்டும் என்று கோரின. தேர்தலை நடத்தினால் தெற்கின் ஏழு மாகாணங்களிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை ரணில் வழங்கிவிட்டால் என்றவாறே தென்னிலங்கையில் இனவாதப் பரப்புரை நடக்கும். அதனால் தேர்தல்களை நடத்த முடியாது என்று ஜனாதிபதி ரணில் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலையும் எந்தக் காரணத்துக்காகவும் ரணில் நடத்தமாட்டார் என்பது தெளிவாகின்றது. இதுவே இப்போதுள்ள அரசியல் நிலைமை. எனவே, ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராவோம்.புதிய ஜனாதிபதி, அதையடுத்துப் புதிய பாராளுமன்றம் என்ற நிலைமாறல்களுக்குப் பின்னர்தான் தேசிய இனப்பிரச்னை தொடர்பில் எந்த மாற்றமும் ஏற்பட முடியும் என்கிறார் .

அதேசமயம் தமிழ் தரப்பினர், தமிழ் மக்களிடையே தன்னால் அரசியல் தீர்வை தரமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி மீண்டுமொரு ஜனாதிபதி தேர்தல் மூலம் நாட்டைக்கைப்பற்றும் தந்திரோபாயத்தையே ரணில் வகுத்து வருகிறார் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
Next Post
மீண்டும் “மெகா பொலிஸ்”; நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை!

மீண்டும் "மெகா பொலிஸ்"; நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு