Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இலங்கைப் பொருட்களுக்கு 10 சதவீத புதிய இறக்குமதி வரி விதிக்கப்படவுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்காலிகமாக அமுலில் இருந்த 10 சதவீத உலகளாவிய வரி காலாவதியாகும் நிலையில், இலங்கை உள்ளிட்ட 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களுக்கு புதிய வரி முறை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய உழைப்புத் தடுப்பு சட்டங்கள் போதிய அளவில் அமுல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், கனடா, பிரித்தானியா, மலேசியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், மெக்சிகோ, கம்போடியா, ஆர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும்.

அதேவேளை, சீனா உள்ளிட்ட 38 நாடுகளின் பொருட்களுக்கு 12.5 சதவீத இறக்குமதி வரி விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மொத்தம் 60 வர்த்தக பங்காளி நாடுகளின் பொருட்களுக்கும் இந்த புதிய வரி நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் கடந்த ஆண்டு தேசிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட 10 முதல் 50 சதவீதம் வரையிலான “பரஸ்பர வரிகள்” (Reciprocal Tariffs) பின்னர் அமெரிக்க உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து, உலகளாவிய இறக்குமதி வரி தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் புதிய முயற்சியாக இந்த வரி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
Next Post
தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு