Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன் போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன் போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பராமாரிப்பை உரிய முறையில் மேற்கொள்ளாமை தொடர்பில் கேள்வியெழுப்பிய சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய விசாரணைகளை பக்கச்சார்பின்றி நடாத்துமாறு கோரியும் இன்று (24) மதியம் பொதுமக்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

குறித்த வைத்தியசாலையின் முன்பாக ஒன்று கூடிய மக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பி உரிய விசாரணைகள் பக்கச்சார்பின்றி மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுத்த சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் இடமாற்றம் குறித்து மீள்பரிசீலனை வேண்டும் என எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் இவ்விடயம் தொடர்பில் நேற்று (23) சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் முஹமட் இஸ்மாயில் உமர் அலிக்கு இடமாற்றம் வழங்கியமை கண்டிக்கத்தக்கது எனவும், இவ்விடயம் குறித்து நீதியான விசாரணைகளை மேற்கொண்டு தீர்வினைப் பெற்றுக்க கொடுக்குமாறும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் எம்பி சுகாதார அமைச்சரை பாராளுமன்றத்தில் வைத்து கேட்டுக் கொண்டார்.

அதேசமயம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலை சம்பந்தமான காணொளி ஒன்று ஒரு சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருந்தது. இது தொடர்பாக தாதியர், உத்தியோகத்தர் உமர் அலி தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலி,

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் நடைபெறுகின்ற முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததற்கும் நோயாளர்கள் பராமரிப்பில் கவனயீனமாக இருக்கின்றார்கள் என்பதை சுட்டி காட்டியதற்கும் டொக்டர்கள் நேரத்துக்கு கடமைக்கு வரவில்லை வராமல் மேலதிகநேர கொடுப்பனவுகளை எடுக்கின்றார்கள்.

கடமைக்கு வராமல் பொது விடுமுறைகளில் ஓய்வு நாட்களில் வேலை செய்ததாக பொய்யாக ஆவணங்கள் பூர்த்தி செய்து அதனை வைத்திய அத்தியட்ச்சகர் உறுதிப்படுத்தி அதன் பின்னர் அதற்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். என்று நான் கூறியதற்கு கிடைத்த பரிசு” என பாலமுனை வைத்தியசாலைக்கு தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தர் உமர் அலி தனது முகப்புத்தகத்தில் தெளிவுப்படுத்தி கூறியுள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!
செய்திகள்

சின்னக்கதிர்காமம் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தான வருடாந்த மகோற்சவம் நிறைவு!

October 1, 2026
திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு
செய்திகள்

திருகோணமலையில் ‘புதிய ஏற்றுமதியாளர் அபிவிருத்தித் திட்டம்’; தொழில்முயற்சியாளர்களுக்கு விழிப்புணர்வு

October 1, 2026
கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
செய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

October 1, 2026
தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!
செய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!

October 1, 2026
துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்
உலக செய்திகள்

துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்

October 1, 2026
வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
Next Post
சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள்; போதைப்பொருள் இருந்தால் அரசு பொறுப்பேற்கும் என அறிவிப்பு

சோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்கள்; போதைப்பொருள் இருந்தால் அரசு பொறுப்பேற்கும் என அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு