Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குழம்பிப்போன தமிழ் கட்சிகள்!(கட்டுரை)

குழம்பிப்போன தமிழ் கட்சிகள்!(கட்டுரை)

3 years ago
in அரசியல், செய்திகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வகட்சி கூட்டம் எதிர்பார்த்த விளைவுகளை தரவில்லையென்று தமிழக் கட்சிகள் கூறுகின்றன. அரசியல் தீர்வு விடயத்தில் ரணிலின் நகர்வுகள் சந்தேகமளிக்கின்றன
என்று பிரதான எதிர்க்கட்சி கூறுகின்றது. ஆனால், ஜனாதிபதியின் கருத்துக்கள் இரண்டு விடயங்களை மிகவும் தெளிவாக உறுதிப்படுத்துகின்றன. ரணில் ஒரு தேர்தலுக்கு சென்றால் அது ஜனாதிபதித் தேர்தல் மட்டும்தான். அதன் பிறகுதான் எந்தவொரு தேர்தல் தொடர்பிலும் சிந்திக்க முடியும். இரண்டாவது, அனைவரதும் உடன்பாட்டோடும்தான், அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும்.


இப்போது தமிழர் தரப்புகள் என்ன செய்வது? ஒன்றில் அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரையில் அமைதியாக விடயங்களை அவதானித்துக் கொண்டு, தமிழர்களின் பேரம்பேசும் அரசியலை பலப்படுத்த வேண்டும். ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றாலும் அடுத்த நிலையில், பாராளுமன்றத்தை முழுமையாக அவரால் கட்டுப்படுத்த முடியுமா என்னும் கேள்வி எழலாம். ஏனெனில், தற்போதுள்ள நிலையில், ஒரு தனிக்கட்சியால் பாராளுமன்ற பெரும் பான்மையை நிலைநாட்ட முடியாது.

ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு சிக்கலான முடிவுகளையும் எடுக்கப்போவதில்லை. ஏனெனில், அவர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின், தென்னிலங்கையின் பெரும்பாலானவர்களது ஆதரவு தேவை. அதற்குள் கடும்போக்கு தரப்புகளும் அடங்குவர். இந்த நிலையில், ரணிலின் சர்வகட்சி கூட்டங்கள் பெரியளவில் வெற்றிபெறப்போவதில்லை. இதுவரையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டிச் செல்லும் நிலையில் பேசப்பட்ட விடயங்கள் தற்போது, பொலிஸ் அதிகாரம் நீக்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தை நோக்கி கீழிறங்கியிருக்கின்றது.

கோட்டாபய ராஜபக்ஷவிடமும் இவ்வாறானதொரு பார்வையே இருந்தது. இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஸவர்தன் முன்னிலையிலேயே, 13இல் பிளஸூம் உண்டு, மைனஸூம் உண்டு – என்றவாறு அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவை பொறுத்தவரையில், 13ஆவது திருத்தச்சட்டத்தை அவ்வாறு பிளஸ் – மைனஸ் என்று நோக்கவில்லை. உண்மையில், தென்னிலங்கை அரசியலானது, அதிகார மாற்றத்துக்கான நிலைமாறு காலத்தில் இருக்கின்றது. ஒருபுறம் ராஜபக்ஷக்களின் வீழ்ச்சி, மறுபுறம் நாட்டுக்கு யார் தலைமைதாங்குவதென்னும் கேள்வியுடன் தென்னிலங்கை அரசியல் நகர்கின்றது. இதற்கிடையில்தான், ரணில் அரசியல் தீர்வு தொடர்பில் பேசி வருகின்றார்.

தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில், சமஷ்டியை அடையும் வழியும் தெரியாமல் – 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க முடியாமல் – எவரிடம் செல்வதென்று தெரியாமல் தடுமாறுகின்ற நிலையிலேயே இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் சர்வதேசத்திடம் முறையிடக்கூடா தென்று அமெரிக்கத் தூதுவர் கூறிய பின்னர், எவரிடம் சென்று எதைச் சொல்வது? ஒற்றையாட்சிக்குள் தீர்வில்லையென்று கூறுகின்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தனது கொள்கையை நிலைநாட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களைத் திரட்டி போராடும் நிலையில்
இல்லை. அதற்கான சிறு அசைவுகூட காங்கிரஸ் (முன்னணி) பக்கத்திலிருந்து வரவில்லை. சமஷ்டிக்காக போராடுவோம், வாருங்களென்று அழைப்புவிடுத்தால், ஆயிரமளவில் மக்கள் வருவார்களா என்பதே
சந்தேகம். இந்த நிலையில் தமிழ் அரசியல் தரப்புகள் என்ன செய்யப் போகின்றன?

தொடர்புடையசெய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்
உலக செய்திகள்

இந்திய அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தது டெலிகிராம்

June 17, 2026
சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!
செய்திகள்

சுரேஷ் சலேவின் உடல்நிலை கவலைக்கிடம்; ஆடைகளின்றி சோதனை செய்ததை CID ஏற்றுக்கொண்டதாக மனைவி குற்றச்சாட்டு!

June 17, 2026
கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்
செய்திகள்

கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்

June 17, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும்; சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும்; சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை!

June 17, 2026
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி குறித்து வெளியான அறிவிப்பு!

June 17, 2026
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் புலிகளின் தங்கத்தை தேடியவர்களுக்கு ஏமாற்றம்

June 17, 2026
Next Post
TTF வாசனின் முதல் படமே வெற்றி கொடிக்கட்டும்; மஞ்சள் வீரன் திரைபடக்குழு!

TTF வாசனின் முதல் படமே வெற்றி கொடிக்கட்டும்; மஞ்சள் வீரன் திரைபடக்குழு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.