Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும்; சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டும்; சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை!

3 months ago
in செய்திகள்

எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திராணி கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முழுமையாக நிறைவு செய்வதற்கும், பரீட்சைக்குத் தயாராகுவதற்கும் போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை முடிக்க 27 முதல் 31 மாதங்கள் வரை கால அவகாசம் கிடைத்திருந்த நிலையில், இம்முறை வெறும் 21 மாதங்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நாட்டின் பல பாடசாலைகளில் இன்னும் பாடத்திட்டங்கள் முழுமையாக நிறைவுபெறவில்லை எனவும் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்களைப் பயிற்சி செய்யவும், சுய கற்றலில் ஈடுபடவும் போதிய நேரம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் பல மாணவர்கள் தங்களின் பாடக்குறிப்புகள் மற்றும் கல்வி வளங்களை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உயர்தரப் பரீட்சை திகதியை மீளாய்வு செய்து, அதனை ஒத்திவைப்பதற்கான நடவடிக்கையை கல்வி அமைச்சு பரிசீலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்

கத்தாரில் வதிவிட விசா இரத்து செய்யப்பட்டால் 14 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்; விதிகளை மீறினால் தினசரி அபராதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு