கத்தாரில் வதிவிட விசா (Residency Permit) இரத்து செய்யப்பட்டவர்கள், 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகம் (MoI) அறிவித்துள்ளது.
முன்னதாக இதற்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது இரண்டு வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவை மீறுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10 கத்தார் ரியால் (QR 10) அபராதம் விதிக்கப்படும்.
மேலும், விசிட் விசாவில் வருபவர்கள் தங்களின் தங்குமிட காலத்தை பாஸ்போர்ட் ஸ்டிக்கர் மூலம் சரிபார்க்க வேண்டும் என்றும், அவகாசத்தை தாண்டினால் நாள் ஒன்றுக்கு QR 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பயணிகள் விமான நிலையம் செல்வதற்கு முன் Metrash என்ற ஆப் மூலம் தங்களின் போக்குவரத்து விதிமீறல் அபராதங்கள் அல்லது பயணத்தடைகளை சரிபார்த்து செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








