Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு -காலி வரையான கடல் பிராந்திய பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

மட்டக்களப்பு -காலி வரையான கடல் பிராந்திய பல இடங்களில் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.

இன்றைய (26) வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மலைப் பிராந்தியத்தின் கிழக்கு சரிவுகளிலும்,வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும்.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் ஹம்பாந்தோட்டை, மாத்தறை ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 கிலோமீற்றர் வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 – 50 மில்லிமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் வான்வெளி முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
உலக செய்திகள்

ஈரான் வான்வெளி முழுமையாக அமெரிக்க கட்டுப்பாட்டுக்குள்; டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு

June 18, 2025
மட்டக்களப்பில் 12 சபைகளையும் தோற்ற நீங்கள் மிச்சம் இருக்கின்றவற்றையும் தோற்பீர்கள்; அருண் ஹேமச்சந்திராவை பார்த்து கூறிய சாணக்கியன்
அரசியல்

மட்டக்களப்பில் 12 சபைகளையும் தோற்ற நீங்கள் மிச்சம் இருக்கின்றவற்றையும் தோற்பீர்கள்; அருண் ஹேமச்சந்திராவை பார்த்து கூறிய சாணக்கியன்

June 18, 2025
இஸ்ரேலின் F-35 போர் விமானத்தை  சுட்டு வீழ்த்திய ஈரான்
உலக செய்திகள்

இஸ்ரேலின் F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

June 18, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; மட்டு அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன்
செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; மட்டு அரசாங்க அதிபர் ஜே.ஜே. முரளிதரன்

June 18, 2025
விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவன்
செய்திகள்

விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த மருத்துவத்துறை மாணவன்

June 18, 2025
கரடியனாறு பதுளை வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி
செய்திகள்

கரடியனாறு பதுளை வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் பலி

June 18, 2025
Next Post
கிளிநொச்சி பகுதி ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது

கிளிநொச்சி பகுதி ஒன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 10 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு