இராவணா எல்ல சரணாலயத்தில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான ‘நில்திய பொக்குன’ பகுதிக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி சிலர் சுற்றுலாப் பயணிகளை அப்பகுதிக்கு அழைத்துச் செல்வதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சுற்றுலா நடவடிக்கைகளுக்கான உத்தியோகபூர்வ நடைமுறைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் வரை நில்திய பொக்குன பகுதிக்குள் நுழைவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், திணைக்களத்தினால் வழங்கப்படும் உரிய அனுமதிப்பத்திரம் மற்றும் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் பங்குபற்றல் இன்றி எவரும் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அப்பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நில்திய பொக்குன பகுதியில் சுற்றுலா நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலும் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக நடைமுறையிலுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமையச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ள







