Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை பயணம்; இதுவே காரணம்!

அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை பயணம்; இதுவே காரணம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பாரத் மாதா விழித்துவிட்டாள்.. தமிழ் தாய் விழிக்கவில்லை. அவரை விழிக்க வைக்கும் பயணமே இது. தமிழ்தாயை மீட்டு எடுக்கும் பயணம் இது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக சார்பில் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ இன்று மாலை துவக்க உள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 168 நாட்கள் யாத்திரை மேற்கொள்ள உள்ளார்

ராமேஸ்வரம் முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்கிறார் அண்ணாமலை. மிக நீண்ட அரசியல் யாத்திரையாக இது இருக்க போகிறது. பாரத் ஜோடோ யாத்திரை காங்கிரஸ் கட்சியை வலிமைபடுத்தியது போல இந்த யாத்திரை பாஜகவை தமிழ்நாட்டில் வலிமைப்படுத்தும் என்று அண்ணாமலை நம்பிக்கை கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பாஜகவை வலிமைப்படுத்தும் விதமாக அவர் இந்த யாத்திரையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று ராமேஸ்வரத்தில் விழா நடக்கிறது. இதில் பாஜகவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை,. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை அகற்றுவதே நம்முடைய பணி. 2024ல் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார்: 400 எம்பிக்கள் வெல்வார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 40 எம்பிக்கள் பாஜக சார்பாக வெல்வார்கள். என்னுடைய யாத்திரை ஒரு வேள்வியாக, தவமாக இருக்க போகிறது. இதற்கு வந்த கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லோருக்கும் என்னுடைய நன்றிகள். வருகின்ற காலத்தில் நாம் நிறைய பேசுவோம். இந்த நடைப்பயணத்தில் நிறைய விஷயங்களை நாம் பேசுவோம். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு நன்றிகள்.

நம்முடைய பாஜகவின் வளர்ச்சியை உறுதி செய்யும், நமது வெற்றியை உறுதி செய்யும் நடைபயணமாக இந்த பயணம் இருக்க போகிறது. பாஜக மக்களுக்கான கட்சி. பாரத மாத உறக்கத்தில் இருந்து எழுந்தவிட்டார் என்று விவேகானந்தர் கூறி இருந்தார். 2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பின் உறக்கத்தில் இருந்து பாரத் மாதாஎழுந்தார். உலக நாடுகளும் கூட இதை ஒப்புக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் பார்க்கின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு சொந்த வீடு,கேஸ் சிலிண்டர், தண்ணீர் வசதியை கொடுத்தவர் மோடி. அவர் ஒரு சாமானியர். அவர் நடத்தும் ஆட்சி சாமானியர் ஆட்சி. 9 ஆண்டுகளில் இந்தியாவை பெருமையின் உச்சிக்கு கொண்டு சென்றவர் பிரதமர் மோடி.

பாரத் மாதா விழித்துவிட்டாள்.. தமிழ் தாய் விழிக்கவில்லை. அவரை விழிக்க வைக்கும் பயணமே இது. தமிழ்தாயை மீட்டு எடுக்கும் பயணம் இது. ஊழலில் திளைத்து உள்ள திமுகவை வீழ்த்தும் பயணம் இது. அதை உணர்ந்தே கூட்டணி கட்சிகள் இங்கே வந்துள்ளன.

இது ஒரு நீண்ட நெடிய வேள்வி இது. இந்த யாத்திரை ஒரு தவம் போல நடக்க போகிறது. பாஜக தொண்டர்களின் யாத்திரை இது. தேசிய தலைவர்களின் ஆசியுடன் நடக்கும் யாத்திரைக்கு. நாம் மக்களிடம் செல்ல வேண்டும். நான் பட்டி தொட்டி எல்லாம் செல்ல போகிறேன். மக்களிடம் பேச போகிறேன். பிரதமர் மோடி இதயபூர்வமாக தமிழராக தன்னை காட்டிக்கொண்டு உள்ளார். தமிழர்களின் புகழை இந்த அளவிற்கு எந்த பிரதமரும் தூக்கி பிடித்ததே கிடையாது. ஐநா முதல் உலகம் வரை திருக்குறளை கொண்டு சென்றவர் பிரதமர் மோடி. அதை மறுக்க முடியாது, என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
மனித புதைகுழியின் அகழ்வுக்கு நிதி ஒதுக்கப்படுமாம்; ஜனாதிபதி கூறியதாக விக்னேஸ்வரன் எம்.பி தெரிவிப்பு!

மனித புதைகுழியின் அகழ்வுக்கு நிதி ஒதுக்கப்படுமாம்; ஜனாதிபதி கூறியதாக விக்னேஸ்வரன் எம்.பி தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.