அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற ஆசிரியர் மீதானதாக்குதல் சம்பவம் தொடர்பான சந்தேகத்திற்குரிய மாணவர்கள் இருவரையும் அச்சுவேலி சிறுவர் சீர்திருத்த பாடசாலையில் இரு வாரங்கள் தடுத்து வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம் எச். மொகமட் ஹம்சா உத்தரவிட்டார்.
சந்தேகத்திற்குரிய இரு மாணவர்களையும் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து கடந்த
27 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்தனர்.அட்டாளைச்சேனை மத்திய
கல்லூரி இரு மாணவர்கள் ஆசிரியர் மீது தாக்குதல் ஆசிரியர் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதி கடந்த புதன்கிழமை அட்டாளைச்சேனை மத்தி ய கல்லூரியில் கற்பிக்கும் காரைதீவைச் சேர்ந்த திருநாவுக்கரசு கோகுல வாசன் என்ற ஆசிரியர் மீது அதே கல்லூரியில் உயர் தரம் கற்கும் இரு மாணவர்கள் , ஒரு மாணவரின் சகோதரர் மற்றும் மற்ற மாணவனின் பெற்றோர்
ஆகியோரால் பாடசாலை முடி வடைந்த நேரத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. தெரிந்ததே. ஆசிரியரின் கண்ணில் காயம் ஏற்பட்டதில் அவர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த ஆசிரியரின் மடிக்கணினி, மோட்டார் வண்டி, மூக்குக்கண்ணாடி என்பன சேதமடைந்துள்ளன.பாடசாலையின் ஒழுக்க கோவையை செயல்படுத்துவதில் எற்பட்ட முரண்பாட்டில் இத்தாக்குல் நடை பெற்றதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் தெரிவித்தார்
இதனையடுத்து நேற்றுமுன் தினம் பாடசாலை ஆசிரியர்கள் குறித்த ஆசிரியர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது வன்மையாக கண்டிக்கத்தக்க ஒரு செயல்.
தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்று சக ஆசிரியர்கள் குரல் எழுப்பினர்.அக்கரைப்பற்று பொலிஸார் தலையிட்டு சந்தேகத்திற்குரிய இரு மாணவர்களையும் கைது செய்து மன்றில் ஆஜர்படுத்தினர்.