வட இந்தியாவிலுள்ள மகா கும்பமேளாவில் அமௌனி அமாவாசையான இன்று (29) ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 31 பேர் உயிரிழந்துள்ளதோடு, கூட்ட நெரிசலில் சிக்கிக் காயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேநேரம் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.
திரிவேணி சங்கமத்தில் பக்தர்களை நீராட வேண்டாம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கிப் பக்தர்கள் உயிரிழந்ததையடுத்து, புனித நீராடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.