Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!

அநுராதபுர புனித நகரில் ராமர், சீதையம்மன் கோவில்களைக் கட்டத் திட்டமா? – கம்மன்பில கேள்வி!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுர புனித நகரத்தின் புதிய அபிவிருத்தித் திட்டத்தில் ராமர் மற்றும் சீதையம்மன் கோவில்களை நிர்மாணிப்பதற்கு வழிவகுக்கும் வகையில் வாசகங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள புதிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பில், பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுராதபுர புனித நகரத்தில் ஏற்கெனவே சிவன் கோவில் ஒன்று காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், புதிய திட்ட அறிக்கையின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பக்கங்களில் புனித தலங்களை உள்ளடக்கி புனித நகரத்தை விரிவுபடுத்துவது தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த இடங்களில் ‘பௌத்த புனித தலங்கள்’ அல்லது ‘தொல்பொருள் புனித தலங்கள்’ எனக் குறிப்பிடப்படாமல் பொதுவாக ‘புனித தலங்கள்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் அநுராதபுர புனித நகரத்தை அனைத்து மதங்களின் புனித தலங்களும் அமைந்துள்ள இடமாக மாற்றி, பௌத்தர்களின் புனிதப் பகுதியை சர்வமத மையமாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், அபிவிருத்தித் திட்டத்தின் ஐந்தாம் பக்கத்தில் புனித நகரம் அதி வரையறைக்குட்பட்ட வலயம், சாதாரண வலயம் மற்றும் பொதுச் சேவை வலயம் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பொதுச் சேவை வலயத்தில் இடம்பெறும் வணிக நடவடிக்கைகள் பௌத்த மதக் கோட்பாடுகளுக்கு அமைவாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு திட்டத்தில் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், புனித நகரப் பகுதியில் மதுபான விற்பனை நிலையங்கள், சூதாட்ட மையங்கள் மற்றும் மசாஜ் நிலையங்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

எந்தெந்த கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்குவது, எவற்றுக்கு அனுமதி மறுப்பது என்பது தொடர்பான அதிகாரங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!
செய்திகள்

பொலிஸ் தடுப்பில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு; ஹோமாகம பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்!

October 26, 2026
நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!
செய்திகள்

நாளை பாடசாலைகளுக்கு விடுமுறை; க.பொ.த சாதாரண தர அழகியல் செய்முறைப் பரீட்சைகள் வழமைபோல் நடைபெறும்!

October 26, 2026
மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

October 26, 2026
ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!
செய்திகள்

ரணில் வழங்கிய பொதுமன்னிப்பு இரத்து; உடனடியாக சரணடைய உத்தரவு!

October 26, 2026
பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு
செய்திகள்

பொத்துவில்- ஊறணி பாலத்திற்கு அருகில் யானை உயிரிழந்த நிலையில் மீட்பு

October 26, 2026
அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!
செய்திகள்

அக்கரைப்பற்றில் இருந்து காணாமல் போன 44 வயதுடைய நபரைத் தேடிப் பொதுமக்களின் உதவி கோரல்!

October 26, 2026
Next Post
மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

மட்டு ஏறாவூர் தன்னாமுனையில் சோகம்; நீர் நிரம்பிய வாளிக்குள் விழுந்து 14 மாதக் குழந்தை உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு