போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.







